
டுபாய் இஸ்லாமிக் வங்கியில் Dubai Islamic Bank (DIB) கடனட்டை வைத்துள்ளவர்கள் 500 திர்ஹமுக்கு அதிகமான போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்த முடியும் என்று டுபாய் பொலிஸார தெரிவித்துள்ளனர்.
அபராதங்களை 3, 6, 9 அல்லது 12 மாத தவணைகளில் செலுத்தலாம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டுபாய் பொலிஸாரும் துபாய் இஸ்லாமிக் வங்கியும் கைச்சாத்திட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதி கருதி அறிமுகப்படுத்தி வரும் மூலோபாய திட்டத்திற்கமைய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.