நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும், தொழிலாளர்கள் விடயத்தில் இந்தத் தேர்தலின் தாக்கம் எவ்வாறுள்ளது என்பது தொடர்பிலும், தொழிற்சங்;க பிரமுகர்களிடமும், தொழிலாளர்களிடமும் ‘வேலைத்தளம்’ நேர்காணலை மேற்கொள்கின்றது.
இன்றைய நேர்காணலில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜொஸப் ஸ்டாலின், எம்முடன் இணைந்து கொண்டார்.
கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?
பதில் – ஜனநாயகம் இல்லாதா நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கவும், தொழிலாளர்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாபதற்காகவும், ஊழலுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
ஆனால், அதனை மீறி இந்த அரசாங்கம், தொழிலாளர்கள் தொடர்பான சட்டத்திட்டங்களை மாற்றவும், ஊழல்களில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், மக்கள் தமது எதிர்ப்பை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படுத்தி உள்ளனர்.
கேள்வி – தேர்தலின் பின்னர் எவ்வாறான மாற்றம் நிகழ வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில் – இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தனியார்மயப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறுகிறது. குறிப்பாக கல்வித்துறையை தனியார் மயப்படுத்தல். பாடசாலைகளில் பணம் அறிவிட சுற்றரிக்கையும் வெளியிடப்பட்டது.
இதேவேளை, 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட சிறுபான்மை மக்களின்; வாக்குகள் முக்கியமாக அமைந்தது. எனினும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், இந்தத் தேர்தலில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான தமது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். எனவே, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முனனெடுக்க வேண்டும்.
கேள்வி – தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொழிலாளர் ரீதியாக உங்களுடைய எதிர்ப்பார்ப்பு என்ன?
பதில் – தொழிலாளர் சார்பு அனைத்து தரப்பினரும் ஒன்றியணைந்து, தமது உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அமைச்சரவை மாற்றங்கள் என்பன பொய் நாடகங்களாகும். அரசாங்கத்தை தனியார்மயப்படுத்தும் செயற்பாட்டு எதிராகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையிலேயே தொழிலாளர் தரப்பை எடுத்துக்கொண்டால், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இலக்கும் தன்மையை அது ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசாங்கத்தை நம்பி எதுவும் கிடைக்கப்போவதில்லை. போராடித்தான் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– என்றார் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின்.