போராட்டம் வெற்றி! மகிழ்ச்சியில் ஆசிரியர் சங்கம்

அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள பாடசாலைகளில் 95 வீதமானவை இன்று மூடப்பட்டதாகவும் மிகுதி 5 வீத பாடசாலைகளும் குறைந்த எண்ணிக்கையான ஆசிரியர்களை கொண்டே நடத்தப்பட்டது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் உட்பட 21 இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பலத்தை இன்றாவது அரசாங்கம் இனியாவது தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இன்று ஆசிரியர், அதிபர்கள் மேற்கொண்ட சுகயீன லீவு போராட்டத்தின் காரணமாக சுமார் இரண்டு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சம் (25,800,000) மணித்தியால கல்வி மாணவர்களுக்கு இல்லாமல் போயுள்ளது என்று கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்கவேண்டாம் என்று ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமையே இதற்குக் காரணம் என்று கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உட்பட பல விடயங்களை முன்வைத்து இன்று நாடு முழுவதும் உள்ள அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவு ​போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435