போலி கடவுச்சீட்டுடன் பிரான்ஸ் செல்ல முயன்ற நபர் கைது!

போலியாக தயாரிக்கப்பட்ட விமான டிக்கட் மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி மாலைதீவு செல்வதாக கூறி டுபாய் வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருரை கட்டுநாயக்க குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எமிரேட்ஸ் விமானசேவையின் இ.கே 650 இலக்க விமானத்தினூடாக டுபாய் சென்று அங்கிருந்து பிரான்ஸ் செல்வதற்கு கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகைத் தந்திருந்தார்.

விமான டிக்கட்டுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் குடிவரவு குடியகழ்வு பிரிவிற்கு சென்ற குறித்த இளைஞன் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துகொண்டதை அவதானித்த பிரதான குடிவரவு குடியகழ்வு அதிகாரி அந்நபர் குடியகழ்வு பிரிவுக்குச் செல்வதற்கு முன்னர் கடவுச்சீட்டு, வீஸா மற்றும் விமானடிக்கட் என்பவற்றை பரிசோதித்தார். இதன்போது அதில் சில தகவல்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தமை அவதானிக்கப்பட்டது. .

சந்தேகநபர் கடவுச்சீட்டில் அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் அவருடைய புகைப்படத்தை ஒட்டியுள்ளமை ஸ்கேன் பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.
அவருடைய காற்சட்டை பொக்கேட்டில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து மாலைதீவு வரை செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட உண்மையான கடவுச்சீட்டும் அதற்கான டிக்கட்டும் காணப்பட்டன.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச இளைஞர் ஒருவர் பிரான்ஸ் ஊடாக ஸ்பெயின் செல்வதற்கு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட கடவுச்சீட்டின் தகவல்களை இரசாயன திரவம் பயன்படுத்தி அழித்து அதில் குறித்த சந்தேகநபரின் தகவல்கள் பதியப்பட்ட போலி வீஸாவையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

முதலில் மாலைதீவு செல்வதாக விமானநிலைய குடிவரவு குடியழ்வு திணைக்க அதிகாரிகளிடம் கூறி விட்டு விமானநிலையத்தில் சிறிது தூரம் சென்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் டுபாயினூடாக பிரான்ஸ் செல்வதாக கூறி அதற்கான எமிரேட்ஸ் விமானத்திற்கு செல்ல முற்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435