மட்டக்களப்பில் பதவி ஆட்சேர்ப்புக்கு முரணான நேர்முகத்தேர்வு

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிலவும் ஆசிரியர் ஆலோசகர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பின்னர் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணாக நேர்முகப் பரீட்சை நடைபெற்றிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று (13) கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளிட்டடோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரினால் வலயத்தில் உள்ள அதிபர்களுக்கு 27.06.2017 ஆம் திகதி BT/ZEO/GEN/2017 இலக்கமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின்படி வெற்றிடமாகவுள்ள 09 பாடங்களுக்குரிய ஆசிரியர் ஆலோசகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இந்த விண்ணப்பம் கோரல், 2014.09.19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள கல்வி அமைச்சின் ED/02/29/01/01/16 இலக்கமிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரணாகக் காணப்படுகிறது.

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின் படி பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதுடன் பட்டப் பின்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் சேவை -1 அல்லது ஆசிரியர் சேவை 2-1 ஆகியவை தகைமையாகக் கொள்ளப்படுவதோடு,

அதிகூடிய வயதெல்லை 50 ஆக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திலெடுக்காமலேயே வலயக் கல்விப் பணிப்பாளரின் விண்ணப்பம் கோரல், மற்றும் நேர்முகப் பரீட்சை என்பன இடம்பெற்றுள்ளன.

மேலும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணாக 12 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வலயத்தில் பல்வேறான பதவிகளுக்கு பொருத்தமற்ற உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆசிரியர் ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட சட்டவிதிகளுக்கு முரணான செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றது.

சிறந்த வினைத்திறனுள்ள கல்வியை வழங்குவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் தடையாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435