மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்காவில் நடாத்திவரும் காலவரையறையற்ற சத்தியாகிரகப் போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து கிழக்குப் பலகலைக் கழக மாணவர்கள் நேற்று (07) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் மூவின மாணவர்களும் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் பட்டதாரிகள் அதிகமானவர்களுக்கு தொழில்வாயப்பு வழங்கப்படவில்லை நாங்களும் எமது பட்டப்படிப்பிளை முந்த பின் போராட்டம் நடாத்தி வேலை பெற்றுத்தரும் நிலையை மாற்றியமைத்து அரசாங்கம் தேசிய கொள்கையொன்றை வகுக்கவேண்டும்.
ஒரு வாரத்தில் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மஹிந்த அரசில் பல பல அரச வேலைவாயப்பு மைத்திரி அரசியல் இல்லை வேலைவாயப்பு, நல்லாட்சி அரசு மெல்லக் கொல்லும் விசமா?, பிரதமர் வழங்கியது 6 மாத அவகாசம் நாங்கள் பட்டம் முடித்தோ பல வருடம், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று முதலமைச்சரே, தொழிலுக்கு உதவாத கல்வி எமக்கு எதற்கு, கண்விழித்து படித்தது வீதியில் உறங்கவா? அரசே வேலைவாய்ப்புக்கான தேசிய கொள்கையை உருவாக்கு , காலத்தைக் கடத்தாமல் வேலைவாய்ப்புக்களை வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.