மட்டு போதான வைத்தியசாலை பணியாளர் போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 12 கோரிக்கைகளை முன் வைத்து நேற்றுமுன்தினம் (31) மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

சுகாதார பணியாளர்களின் பதவியுர்வை துரிதப்படுத்த வேண்டும் 180 நாட்கள் தொண்டர்களாக வேலை செய்தவர்களை, நிரந்தரமாக்க வெண்டும், சீருடைக்கான கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும், ஒரு வாரத்தில் வேலை நாட்களை ஐந்து நாட்களாக ஆக்க வேண்டும். வாரத்துக்கு 40 மணித்தியாலயங்களுக்கு மேல் கடமைபுரிமயும் அனைத்து மணித்தியாலயங்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்களை முன்வைத்து சுலோகங்கள் ஏந்தியவாறு நண்பகள் 12 மணி தொடக்கம் பிற்பகள் 1மணி வரை இவர்கள் இந்த கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் 14 நாட்களில் தீர்வு எட்டப்படாவிட்டால் தொடாந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர்கள் தெரிவித்தனர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435