மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு விதிக்கப்பட்ட அபராதம்

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் சாரத்தியம் செய்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகன வரி அனுமதிப்பத்திரம் என்பன இன்றி வாகனம் செலுத்தியமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களை குறித்த சாரதிக்கு எதிராக பொலிஸார் முன்வைத்தனர்.

வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சாரதி குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய 3 குற்றங்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 75 ஆயிரம் ரூபா அபராதமாகவும், வாகன வரி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாவுமாக மொத்தம் 77 ஆயிரத்து 500 ரூபாவை குற்றவாளி அபராதமாக செலுத்தவேண்டும்.

அபராதப் பணத்தில் ஒரு பகுதியான 38 ஆயிரத்து 750 ரூபாவை நேற்றைய தினமும் எஞ்சிய 38 ஆயிரத்து 750 ரூபாவை வரும் 23ஆம் திகதியும் செலுத்தி முடிக்கவேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435