மத்திய கிழக்கு தொழில்வாய்ப்புகள் தொடர்பான தற்போதைய நிலைமை

மத்திய கிழக்கின் சில நாடுகளில் உள்நாட்டவர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அந்தந்த நாடுகளின் தொழிற்படையில் வெளிநாட்டு பணியாளர்களின் தொழில்வாய்ப்புக்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் குவைட் முதன்மை பெறுவதுடன், அரச அதிகாரிகள் குறிப்பிடுவதன் அடிப்படையில், ஏழு வருடங்களுக்குள் ஆயிரக்கணகான வெளிநாட்டவர்களின் தொழில்வாய்ப்புக்களை குறைப்பதற்கு தயார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், ஓமான் நாட்டவர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சில தொழில்வாய்ப்புக்காக விதிக்கப்பட்டிருந்த தடையை தொடர்ந்தும் நீடிக்க அண்மையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் மனித வள அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், வெளிநாட்டு பணியாளர்களை தொழில்களிலிருந்து படிப்படியாக நீக்குவதற்கு ஓமான் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள தொழில்வாய்ப்புக்களுக்காக தொழில் உடன்படிக்;கை கைச்சாத்திட தொழில் முகவர் நிறுவனங்;களுக்கு முடியாது என்றும், இது குறித்து ஏதாவது தெளிவற்ற நிலைமை இருக்குமாயின், மனிதவள அமைச்சை தொடர்கொள்ளுமாறும் அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435