
மத்திய மாகாணத்தில் சுகாதார சேவையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் பந்துல யாலேக தெரிவித்தார்.
இதனால் சேவையை முன்னெடுத்து செல்வதில் பாரிய சவாலொன்றை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும், சுமார் 300 வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்றும் தெரிவித்த அவர் சில கிராமிய வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியரேனும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
வேலைத்தளம்