மலையக பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றுவோருக்கான நிரந்தர நியமனம் மற்றும் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் வாரங்களில் உறுதியான தீர்மானத்தை பெற்றுத்தருவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உறுதியளித்துள்ளார் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
வணிகக், கப்பற்றொழில் திருத்தச் சட்டம் மீதான விவாதம் நேற்று (18) பாராளுமன்றில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் தான் கல்வியமைச்சருடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் மலையக மக்களுக்கு நடைமுறை சாத்தியமான விடயங்களை நாம் முன்னெடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.