மலையக பட்டதாரிகளுக்கு ஏப்ரலில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் தமிழ் மொழிமூல கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் நேற்று (21) பேச்சு மத்தியமாகாண சபையிலுள்ள முதல்வரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையயைடுத்தே முதலமைச்சர் இவ்வுறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இ.தொ.கா. பிரதிநிதிகள் குறிப்பிட்ட விடயங்களை கேட்டறிந்த மாகாண முதல்வர், வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் பதவி வழங்கப்படும் என்றும், இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு இ.தொ.காவினர் விடுத்த வேண்டுகோளுக்கும் முதல்வர் சாதக பதிலை வழங்கியதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதொகாவின் சார்பில் அதன் மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், துரைமதியுகராஜா, சக்திவேல், சிவஞானம் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.