மாத்தளை மாவட்ட தோட்டத் தொழிலாளருக்கு புதிய வீடுகள்

மாத்தளை மாவட்டத்தில் நிரந்தர வீடுகளின்றியிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆரம்ப கட்டமாக ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் அளுவிஹார தெரிவித்தார்.

தொடர் வீட்டுத் திட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்காகவே இந்த வீடமைப்பு திட்டம் அமைக்கப்படவுள்ளது என்றும் நீண்ட நாட்கள் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இடிந்த நிலையில் அவ்வீடுகள் காணப்படுவதாகவும் எனவே இவ்வாயிரம் வீட்டுத் திட்டத்தினூடாக அம்மக்களுக்கு இருப்பிட வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435