ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்று பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பை பெறும் பட்டதாரிகள் உள்வாரி வௌிவாரி என்று பாகுபாடின்றி உள்வாங்கப்படுவதுடன் 35 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. 6 மாத பயிற்சியுடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்கும் பயிற்சிக்காலம் வழங்கப்படும். வெற்றிடங்களை கண்காணிப்பதற்கென ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்படும். குறித்த விடயம் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்