மார்ச்சில் 52,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

​வேலையில்லா பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் 52,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அரச நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய, கற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன் பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்கமைய அனைத்து பட்டதாரிகளும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அவர்களுக்கு 6 மாத தலைமைத்துவம் மற்றும் தொழில்பயிற்சி வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த பயிற்சிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாவட்டச் செயலகங்களில் இருந்த பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்டச் செயலகங்களில் கையளிக்கவேண்டும்.

க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ், கணிதம், தொழில்நுட்பம் போன்ற பாடவிடயங்களை கற்பிப்பதற்கு ஆயிரக்கணக்கான தொழில்வாய்ப்புகள் காணப்படுகின்றன. நாட்டில் தற்போது 454 தேசிய பாடசாலைகள் உள்ளன. அவற்றை ஆயிரமாக அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொது நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழில்வாய்ப்புக்கள் உள்ளமையை ஜனாதிபதி கண்டறிந்துள்ளார். எனவே பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது கடினமான விடயம் அல்ல.

கற்ற இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையினூடாக இவ்வாண்டு 152,000 பேருக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே உள்வாரி மற்றும் வௌிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435