கொவிட்-19 காரணமாக 13,532 வெளிநாட்டு தொழிலாளர்கள் மாலைத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைத்தீவு குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட வெளிநாட்டவர்களில் 1,393 இலங்கையர்கள் அடங்குவதாக மாலைத்தீவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
5,014 பங்களாதேஷ் பிரஜைகள், 5,026 இந்திய பிரஜைகள், 809 இந்தோனேசிய பிரஜைகள், 336 பிலிப்பைன்ஸ் பிரஜைகள், 350 தாய்லாந்து நாட்டினர் மற்றும் 604 நேபாள பிரஜைகள் உள்ளனர்.
தொற்றுநோயால் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்பிய ஆவணமற்ற தொழிலாளர்கள் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது என்பது மாலத்தீவு குடிவரவு, பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மாலத்தீவு பொலிஸ் சேவை (எம்.பி.எஸ்) உள்ளிட்ட தொடர்புடைய மாநில அதிகாரிகளால் தொற்றுநோய்க்கு முன் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.