மாலைதீவில் பணியாற்றும் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் சுகாதார பாதுகாப்பு நிலையம் அறிவித்துள்ளது.
இன்று (24) பகல் டிவிட்டர் ஊடாக இத்தகவலை வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, இன்று இரு அந்நாட்டு பிரஜைகள் இருவருக்கும் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கும் இந்தியா மற்றும் இலங்கை பிரஜைகள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மாலைதீவில் கொவிட் 19 தொற்றாளர்கள் 116 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 15ம் திகதி முதலாவது கொவிட் 19 தொற்றாளர் அடையாளங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.