மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் இன்று 466 பேருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் இன்றைய தினத்தில் இதுவரை 466 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று முற்பகல் 220 ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தநிலையில் தற்போது மேலும் 246 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று 101 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியிருந்தது. முன்னதாக மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பெண்ணொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியிருந்த நிலையில் பின்னர் அவருடைய மகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் மினுவங்கொட கொத்தணியில் இதுவரை கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435