கம்பஹா – மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.
திவுலப்பிட்டியில், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதியானதை அடுத்து, நேற்றிரவு வரை 101 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேலும் 32 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
மினுவாங்கொடையை சேர்ந்த 18 பேருக்கும், குருநாகலையை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணம், மொனராகலை, சீதுவ, ஜா-எல, மற்றும் மஹர முதலான பகுதிகளை சேர்ந்த தலா ஒவ்வொருவருக்கும் தொற்றுறுதியானது.
கட்டானையை சேர்ந்த 2 பேருக்கும், மீரிகமயை சேர்ந்த 3 பேருக்கும் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 111 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 513 ஆக உயர்வடைந்துள்ளது.
3 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.