மின்சாரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் அழுத்தம் செலுத்தியுள்ளது.
இம்மாதம் மூன்றாம் திகதி கடமைநோக்கில் கிரிந்திவெல பிரதேசத்திற்கு சென்ற மின்சாரசபை ஊழியர்கள் 3 பேர் மீது இவ்வாறாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தநிலையில் தற்போது வத்துபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் குறித்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறே மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் அழுத்தம் செலுத்தி வருகிறது.
சுமார் 20 பேர் சேர்ந்து இத்தாக்குலை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து வருகின்றனர் என்று தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக சட்டம் நியாயமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. எனவே தமது பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து தற்போது கடமைகளில் இருந்து விலகியுள்ளோம், தொடர்ந்தும் சரியான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிடின் இன்று (06) நடைபெறவுள்ள சந்திப்பையடுத்து விரைவில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சங்கம் எச்சரித்துள்ளது,