மின்சாரசபையில் மேன்பவர் நிறுவன ஊழியர்களாக பணியாற்றிய 3828 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் இன்று (18) வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் இவ்வூழியர்களுக்கான நிரந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.
சுமார் 10- 12 வருடங்கள் வரை மேன்பவர் நிறுவன ஊழியர்களாக மின்சாரசபையில் பணியாற்றியோருக்கே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
பாராளுமன்றம், அமைச்சரவை என்பவற்றில் அங்கீகாரம் பெறப்பட்டு, திரைசேரியில் கலந்துரையாடி இவ்வூழியர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு காலம் எடுத்தாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
மின்சாரசபையில் மேன்பவர் நிறுவன ஊழியர்களாக 6196 பேர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்