சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார சபையின் பொறியிலாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு 13 சதவீதமும், தொழில்நுட்பம் சாரா பணியாளர்களுக்கு 6 சதவீத சம்பள அதிகரிப்பையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மின்சார ஊழியர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது.
இன்று மதியம் 12 மணிக்கு முன்னர் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தராவிட்டால் நாளை மதியம், மின்சாரத்துறை அமைச்சை முற்றுகை உள்;ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றிய கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.