மீண்டும் கஷ்டப்பிரதேசத்திற்கு மாற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் அதிக தூரங்களில் உள்ள போக்குவரத்து வசதியற்ற பாடசாலைகளுக்கு இடமாற்றப்டட்டமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பலவிதமான நெருக்கடிகள் மத்தியில் பல வருட காலமாக கிளிநொச்சிப் பகுதியில் தாம் கடமையாற்றிய பின்னர் தமது சொந்த இடத்திற்கு இடமாற்றம் கோரிய போது வடமாகாண கல்வி அமைச்சு தமது கடந்த கால சேவைகளைக் கவனத்தில் எடுக்காது தம்மை போக்குவரத்தோ ஏனைய வசதிகளோ அற்ற பாடசாலைகளுக்கு இடமாற்றியுள்ளதாகவும் குறித்த ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலை செல்வதற்கு பஸ் வண்டியில் பல மைல் தூரம் பயணம் செய்து பின்னர் கால்நடையாக தூர இடங்களில் உள்ள பாடசாலைக்கு செல்ல வேண்­டிய அவல நிலையில் தாம் உள்ளதாகவும் இது குறித்து வட­மாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததும் பாராமுகமாக இருப்பதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

வேலைத்தளம்/ வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435