மீண்டும் கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில்

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நடந்து முடிந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு கோரி இன்று (30) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுகிறது.

பரீட்சையில் தோற்றிய 6880 பேரில் 2868 பேர் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கவேண்டும் என்றும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ​என்று ​கோரிய வேலையில்லா பட்டதாரிகள் இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

மேலும், அதிக புள்ளிகள் பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாமல் குறைந்த புள்ளிகள் பெற்றோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரது பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நேர்முகப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நான்கு பாடங்களில் விண்ணப்பித்த சிலருக்கு நான்கு பாடங்களுக்கும் நேர்முகத்தேர்விற்கு அழைத்துள்ளனர். ஏற்கனவே அரசாங்க தொழில் செய்கிறவர்களும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினர் முன்வரவேண்டும் என்று கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஆர் நிஷாந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435