மீண்டும் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

தொடரூந்து தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.

முன்னர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கங்களுடன் அரசாங்கம் இணங்கிய, உள்ளக சேவையாளர்களின் பதவி உயர்வை தடை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடரூந்து தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் செயலாளர் சம்பத் ராஜித இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பணியாளர்கள, தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் ஏனைய சில பணியாளர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினருடன், பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, முன்னர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435