அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக விசேட வைத்தியர் அநுருந்த பாதெணிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் அவர் மீளவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக அவர் நான்காவது முறையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அவர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயலாற்றுகின்றார்.
அத்துடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளராக வைத்தியர் செனால் பெர்ணாண்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய உப செயலாளராக வைத்தியர் நவீன் டி செய்சா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.