மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், சிறு மற்றும் ஆழ்கடல் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, பலப்பிட்டிய, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435