இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடத்த மாதம் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த சமரவீர மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளனர்.
அடுத்த மாதம் ஆரம்ப பகுதியில் இடம்பெறவுள்ள இவ்விஜயத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதால் ஏற்படும் பிரச்சினைகள், அதனை தடுப்பது எவ்வாறு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று கடல்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீன்பிடி அமைச்சர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் இந்தி யாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதால் வருடாந்தம் 6 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதுடன் சுமார் 50 ஆயிரம் மீனவக்குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைத்தளம்