முகாமைத்துவ உதவியாளர்கள் நாளை சுகயீன லீவு போராட்டம்

நாளை (27) முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன லீவு போராட்டத்தில் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்களையும் கலந்துகொள்ளுமாறு முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

13 அம்ச கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இப்போராட்டம் தொடர்பில் முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ள விநியோகித்துள்ள துண்டுப்பிரசுரத்தில், தொடர்ச்சியாக கவனத்திற்கொள்ளாத தமது தொழில் உரிமைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு நினைவூட்டுவதற்காக இப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமது தொழில் உரிமைகளான தரம் 1,2,3 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு சம்பளத் திட்டத்தின் அடிப்படையில் வேதனம் பரீட்சை முறையிலான பதவியுயர்வு, முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைப் பொறுப்புக்களை தமது சேவையை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்குதல், 2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட சேவை பிரமாணக் குறிப்பினை 2004இல் இருந்து நடைமுறைப்படுத்தல், முகாமைத்துவ உதவியாளர் சேவை என்பதை முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை என பெயர் மாற்றம் செய்யதல் உட்பட 13 கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் மேற்கொடவுள்ளதாகவும் அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் 10 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435