முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை 35 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது வயது கட்டுப்பாடின்றி முச்சக்கர வண்டியை சாரதிகள் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முச்சக்கர வண்டிச் சாரதிகளின் வயதெல்லையை 35 ஆக அதிகரிக்கும் யோசனை அண்மையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், குறித்த யோசைசனைக்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வயது எல்லை அதிகரிப்பானது அநீதியானதாகும்.
எனவே, குறித்த வயது எல்லையை ஆகக் குறைந்தது 25ஆக குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தாம் கூறியதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியொன்றை செலுத்தி வாழும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த நிலையில், முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.