முதலாளிமார் சம்மேளனத்துடன் இனி பேச்சுவார்த்தை இல்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதில்லை என்று மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆயிரம் ரூபாயினை பெற்றுக்கொடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளார் அதனால் தான் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறேன் எனினும் தற்போதைய புதிய அரசாங்கத்திலும், ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றால் தற்போதுள்ள அமைச்சுப் பதவியையும் துறப்பேன்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்க இனிமேல் எவ்விதமான ஒத்துழைப்பையும் வழங்காது தீபாவளி பின்னர் போராட்டத்தை தொடர உள்ளோம். என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435