முன்னறிவிப்பின்றி சந்தா அதிகரிப்பு- தோட்டத் தொழிலாளர் விசனம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது மாதாந்த வேதனத்தில் முன்னறிவிப்புகள் இன்றி, தொழிற்சங்கங்களுக்கான சந்தா, 233 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 150 ரூபாய் என்ற அப்படையில் தொழிற்சங்க சந்தா மாதாந்தம் அறிவிடப்பட்டுவந்த நிலையில், இந்த மாதம் முதல் அந்தத் தொகை 83 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 233 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவயில் தோட்டத் தொழிலாளர்களின் மாத சம்பளத்திலிருந்து சந்தா கட்டணமே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தோட்ட நிர்வாகத்துக்கு தொழிற்சங்கம் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த சந்தா அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதனம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படும். இந்த நிலையில், பொகவந்தலாவயில் தோட்டத்தில் நேற்றைய தினமே மாதாந்த வேதனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய தோட்டங்களில் இன்று அல்லது நாளைய தினம் மாதாந்த வேதனம் வழங்கப்படவுள்ளது.

தோட்ட நிர்வாகத்துக்கு தொழிற்சங்கம் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த சந்தா அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனம் 700 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில், அந்த தொகையில் மூன்றில் 1 பங்கு தொழிற்சங்க சந்தாவாக அறவிடப்பட்டுள்ளதாகஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தற்போதைய பொருளதார நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பணத்தை அதிகரித்துள்ளமையானது தங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435