வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுச் சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் உலக தொழிலாளர் அமைப்பு வரையில் இன்று (26) கவனயீர்ப்பு பவனியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
காலை 10.00 ஆரம்பமாகும் இப்பவனி நன்பகல் 12.00 மணியளவில் உலக தொழிலாளர் சங்கத்தின் கொழும்பு காரியாலயத்துக்கருகில் சென்று மனுவொன்று கையளிக்கப்படவுள்ளது.
இந்நடை பவனியில் நாட்டில் உள்ள ஏனைய சுயாதீன தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளன. இதனூடாக அரசாங்கம் தொழிற்சங்களிடம் எவ்வாறாக பழிவாங்குகின்றன என்பதை உலக தொழிலாளர் சங்கத்துக்குத் தெரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
எதிர்வரும் வாரங்களில் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் தொழில் அமைச்சு தொடர்ந்து தனது அரசியல் தலைக்கணத்தை தொழிற்சங்களுக்கு காட்ட முற்படுமாக இருந்தால் விரைவில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பொதுச் சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்பிரச்சினையை தீர்க்காமல் இருப்பதற்கு அரசாங்கம் வேண்டுமென்றே செயற்படுகிறது என்று இந்நடை பவனிக்கு ஆதரவு தெரிவிக்கும் சுயாதீன தொழிற்சங்கத்தின் தலைவர ஒருவர் எமது சகோதர இணையளதமான ‘வெடபிம’விற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக 21 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்வதற்காக தொழில் அமைச்சின் அதிகாரிகள் தமது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தனர் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
வேலைத்தளம்