ஐரோப்பாவின் பிரதான மூன்று நகரங்களுக்கான சேவையை வேறு விமானசேவையுடன் இணைந்து வழங்க ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
ஜெர்மனியின் ப்ரன்பர்ட் நகரம், ரோம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நகரங்களுக்கிடையிலான சேவையையே வேறு சேவையுடன் இணைந்து வழங்க ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இந்நகரங்களுக்கான விமான சேவை நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கியமையை கருத்திற்கொண்டு நேரடிச்சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று அரச பொது நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
இதேவேளை, நட்டத்தை கருத்திற்கொண்டு சேவை நிறுத்தப்பட்டாலும் குறித்த நகரங்களில் இருந்த இலங்கைக்கு வரும் உல்லாசப்பிரயாணிகளின் சேவையை இலகுபடுத்துவதற்காக வேறொரு விமானசேவையுடன் இணைந்து கோட் முறையில் சேவையை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அதற்கமைய சம்பந்தபட்ட விமானநிலையத்துடனான பயணத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.