வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிகாட்டல் மூலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம்இளைஞர் யுவதிகளும் கிளிநொச்சி ஐநூறு இளைஞர் யுவதிகளும், மன்னாரில் ஐநூறு இளைஞர் யுவதிகளும் முல்லைத்தீவில் ஐநூறு (500) , வவுனியா ஐநூறு இளைஞர் யுவதிகளும் நன்மை பெறவுள்ளனர்.
RPL முறையானது தொழிலில் ஈடுபடும் அனுபவம் பெற்ற அனைவருக்கும் திறனை அங்கீகரிக்கும் சான்றிதழாகும். இம்முறை மூலம் சான்றிதழ் பெறுவதற்கு வயதுக்கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதுடன் தொழில் அனுபவமே போதுமானதாகும். மேலும் தேர்ச்சியை நிரூபிப்பதற்கு தேவையான ஆற்றல் மற்றும் சான்றுகள் மட்டுமே போதுமானதாகும்.இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய NAITA மாவட்ட தலைமை அலுவலகங்களின் தொலைபேசி இலங்கங்கள் யாழ்ப்பாணம் – 021 2222383 , வவுனியா – 024 2224679 , கிளிநொச்சி – 021 2285615 , மன்னார் – 023 2223404 , முல்லைத்தீவு – 021 2061012