மோதலும் பாலியல் வன்முறையும்

பாலியல் வன்முறை என்பது பாலியல் பலாத்காரத்தின் ஒரு வடிவம், வெறும் குற்றத்திற்கு அப்பாற்பட்ட வன்முறையை உள்ளடக்கிய துஷ்பிரயோகம். இது பெரும்பாலும் தங்கள் சொந்த சமூகத்தின் ஆதிக்கக் குழுவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இயக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர் தன்னுடைய சுயமரியாதை மற்றும் அவமானம் என்பனவற்றின் காரணமாக தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்தாத காரணத்தினால் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்கும் ஒரு போக்கு உள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் ​போது, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோதல் காலத்தின்போது, ​​ஐ.நா விசாரணை உட்பட பல்வேறு தரப்பினர் இலங்கை இராணுவம் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்றது என ஆவணப்படுத்தியுள்ளன.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆண் மற்றும் பெண்களுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு உள்ளனர் என்பதற்கான அடிப்படைகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எல்.ரீ.ரீ.ஈ அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் என்ற அனுமானத்தில் அவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அவர்களை அவமானத்திற்கு உட்படுத்துதல் தண்டனைகளை வழங்குவதற்காக சித்திரவதையாக பாலியல் துஷ்பிரயோகத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினால் பாலியல் துஷ்பிரயோகம் கொள்கைரீதியாக கண்டிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் ஊடாக பலவந்தமாக அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு எதிராகக் கூட பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

எனினும் அவ்வாறான தரப்பினர் கூட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தடுப்புமுகாமில் வாழ்ந்தபோது பாதுகாப்பு தரப்பினரால் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

இலங்கையில் மோதல் நிலைமை இடம்பெற்ற போது பாலியல் ரீதியான துஷ்பிரயோக சம்பவங்கள் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட சிவில் யுத்தம் இடம்பெற்ற காலத்திற்கு மட்டும் மட்டுப்படுத்த ஒன்றல்ல.

1971 இல் சிங்கள இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு தரப்பினரால் கையாளப்பட்ட இவ்வாறான செயல்பாடுகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஜெயவர்தன மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

அந்த சந்தர்ப்பங்களின்போது கையாளப்பட்ட பதிலளிப்புகளில் பாலியல் துஷ்பிரயோகம் என்பது முக்கியமான ஒரு அம்சமாக இருந்தது.

குறித்த காலப்பகுதியில் ஜே.வி.பியுடன் தொடர்பில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் காரணமாக (சிங்கள) படையினரால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பிரேமவதி மனம்பேரி என்ற சிங்களப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவமானது யுத்த காலத்தில் படையினரால் பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெற்றது என்பது தொடர்பில் மக்கள் மனதில் பதிந்த சம்பவமாக இருந்தது.

1988 – 89 வன்செயல்களின்ோது (88 ஜனவரி மாதம் முதல் 94 டிசம்பர் மாதம் வரை) காலப்பகுதியில் மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல்போதல்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்த ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது

அந்த ஆணைக்குழுவின் வெளிப்படுத்தலுக்கு அமைய குறித்த காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலைகள் என்பன இடம்பெற்றதுடன் மக்கள் கட்டுப்படுத்துவதற்காக இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களும் ஒரு கருவியாக கைவிடப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது

தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்தும் ஒரு முறையாக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன கையாளப்பட்டு இருந்மை இலங்கையில் நீண்ட வரலாறு உள்ளது.

வெடபிம – பீ.டபிள்யு. முத்துகுடஆராச்சி
வேலைத்தளம் – ராஜா

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435