பல நாட்கள் வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் பனிக்கட்டிகள் விழவும் தொடங்கியுள்ளன.
கடந்த நாட்களில் 47 -50 செல்சியஸ் வரையான வெப்பநிலை காணப்பட்டமையினால் அந்நாட்டு மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மழையுடன் பனிக்கட்டியும் விழுவதனால் ரம்யமான சூழலை அந்நாட்டில் காணக்கூடியதாக உள்ளது.
கிழக்கு அல் – கேதர், அல் அயின் டுபாய் அதிவேக வீதி, நெஸ்வி நகரின் கிழக்கு பிரதேசம் மற்றும் அல் ஃபயா ஆகிய பிரதேசங்களிலும் நகரங்களிலும் ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தொடர்ச்சியாக பல பிரதேசங்களில் காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் இதனால் மணற் சூறாவளி தோன்றும் அபாயம் இன்னும் இருப்பதாகவும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.