ரயில்வே இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று (12) மாலை தற்காலிகமாக இடைநிறுத்ததப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்தது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடரூந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு பெற்றுகொடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.
இதற்கமைய, எட்டு பேர் கொண்ட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியதாக ரயில்வே ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துளள்ளார்.
இந்தக் குழுவானது ஒரு மாத காலப்பகுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என அவர் தெரிவித்துளள்ளார்.
ரயில்வே சாரதிகள் உதவியாளர்கள் பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று முன்தினம் (11) இரவு முதல் சேவை புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தன.
எனினும், தமது பிரச்சினைகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் நேற்று மதியம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும், அதனால் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று மதியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.