முறையற்ற நியமனங்களினால் நிரந்தரமாக்க முடியாதாம்

இலங்கை தேசிய மொழிக் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சிகளை பெற்ற 1300 பேருக்கு தொழில் நியமனங்களை வழங்க முடியாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இருப்பினும் இடையில் நிறுத்தப்பட்ட பயிற்சிகளை பூர்த்தி செய்ய வசதிகளை வழங்க முடியும் என ஜனாதிபதி செயலாளரினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரின் தலைமையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் தமக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக கடந்த அரசாங்கம் உறுதியளித்திருந்தது என மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.

அந்த நியமனங்கள் பிரதமரினால் வழங்கப்பட்டது என்பதுடன், உரிய நியமங்களின் அடிப்படையில் அவை வழங்கப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435