சேவைக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களுக்கு நாளை (11) வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று (10) தொழிற்சங்கங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இத்தீர்மானம் எட்டப்பட்டது.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 7ம் திகதி நள்ளிரவு பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்தன.
ரயில்வே சேவையை அத்தியவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.