ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில்வே சாரதிகள் இன்று (05) நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, போராட்டத்தைக் கைவிட தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

தொடருந்து இயந்திர சாரதிகள் ஆட்சேர்ப்பு முறைமை ஒழுங்குவிதிகளை மீறி 45 வயதிற்கும் மேற்பட்ட 12 தொடருந்து சேவை பணியாளர்களை, இயந்திர சாரதிகளாக சேவையில் இணைப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435