
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் தீடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
பொதி விநியோகத்தின்போது கட்டுப்பாட்டாளர்களுக்கும், ரயில் நிலைய அதிபர்களுக்கும் இடையில் நிலவும் முரண்பாட்டு நிலைமை தொடர்பிலேயே இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக நாடுமுழுவதும் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.