ரயில் சேவைக்காக இராணுவத்தை பயிற்றுவிக்க நடவடிக்கை

ரயில் இயந்திர சாரதிகள், நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிகளுக்காக இராணுவத்தினரை பயிற்றுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

3 கட்டங்களாக அவர்களுக்கான பயிற்சியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக குருநாகலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ள இராணுவத் தளபதி, இராணுவத்தினரின் சிலரை ரயில் இயந்திரசாரரதிகளாக பயிற்றுவிப்பதற்கு அனுமதி கோரியிருந்தார்.

இதற்கான அனுமதியை தாம் வழங்கியதாக பதில் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 3 கட்டங்களாக, சாரதிகள் 30 பேர், கட்டுப்பாட்டாளர்கள் 30 பேர் மற்றும் நிலைய அதிபர்கள் 30 பேர் என பயிற்றுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், ரயில் பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

வேதனப் பிரச்சினையை முன்வைத்து கடந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கிறது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டததைக் கைவிடப்போவதில்லை என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435