வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் வழங்கிய உறுதிமொழி

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் காலத்தில் வெகு விரைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பபடவுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கல்வி இராஜாங்க அமைச்சரை சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் காலத்தில் வெகு விரைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பபடவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435