ஹொரன ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 34 பேருக்கு கொரோனா

ஹொரன, குருகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் 34 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹொரன பிரசேத சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (31) 145 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 6000 பேர் வரை பணியாற்றும் இவ்வாடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் புலத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று முதற்தடவையாக உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக மூடப்பட்டு இன்று (02) திறக்கப்படவிருந்த குறித்த ஆடைத் தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435