போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் நேற்று (06) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளனர்.
ரயில் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட இலங்கை ரயில்நிலை பொறுப்பதிகாரிகள் சங்கத் தலைவர் என். யூ. கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் ரயில்நிலைய பொறுப்பதிகாரிகள் 48 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றபோதும், ரயில் சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ரயில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் ஆசனங்களை முன் பதிவு செய்தல் முதலான சேவைகள் இடம்பெறாது.
இந்த அடையாள பணிப் புறக்கணிப்பின் காரணமாக ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கும் வருமானம் கிடைக்கமால் போகும். ஆனால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.