தொழில் இழந்த நிலையில் ருமேனியாவின் புடாரெஸ்ட் விமானநிலையில் தங்கியிருந்த 36 இலங்கையருக்கு தொடர்ந்தும் அந்நாட்டில் தங்கியிருந்த பணியாற்ற புதிய தொழில்வாய்ப்பை வழங்க அந்நாட்டு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் அவ்விலங்கையர்கள் பணியாற்றி தொழிற்சாலையில் பலருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்ற ஐயமேற்பட்டதையடுத்து குறித்த இலங்கையர்கள் அங்கு பணியாற்ற மறுப்பு தெரிவித்ததையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் தொழில்வாய்ப்பை இழந்தனர்.
அந்நாட்டு தொழில் அமைச்சர் திருமதி வயோலெமா அலெக்ஸ்ஸன்ரூவின் தலையீட்டின் காரணமாக குறித்த இலங்கையர்களுக்கு தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்ற புதிய தொழில் வாய்ப்பு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளதாக ருமேனிய அரச போலாந்து தூதரகத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த நிலைமையை சுமூக நிலைக்கு கொண்டு வரும் வகையில் செயற்பட்ட ருமேனிய அரசை தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராட்டியுள்ளார்.