லஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கலால் திணைக்கள அதிகாரியொருவரை லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துக்களை புலானய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுகம கலால் அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவல பிரதேசத்தில் நடத்தி வந்த கஞ்சா விற்பனையை தடுக்காமல் இருப்பதற்காக லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஐம்பதாயிரம் ரூபா பணத்தை அவ்வதிகாரி லஞ்சமாக கேட்டிருந்தார் என்றும் 20,000 ரூபா ஏற்கனவே பெற்றுக்கொண்ட அதிகாரி மிகுதி 30,000 ரூபாவை பெற முயற்சித்த போதே கைது செய்து செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இம்மாதம் 28ம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார். அதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.