லெபனானிலிருந்து பிள்ளைகளுடன் நாடுகடத்தப்படும் இலங்கை பணிப் பெண்கள்

லெபனானில் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளும் வெளிநாட்டு பெண் பணியாளர்கள் நாடுகடத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு 21 பேர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில், கணவனுடன் தங்கி இருந்து தொழில்புரியும் பெண்கள், பிள்ளைகளைக் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் பணிகளிலிலிருந்து நீக்கப்பட்டதுடன், தமது பிள்ளைகளின் கல்விக்கும் தடையேற்படுத்தப்பட்டதாக சில பெண்கள் கூறியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து தம்மிடம் தொலைபேசியூடாக தொடர்புகொண்ட இலங்கைப் பெண் ஒருவர் வழங்கிய தகவலை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அந்தப் பெண் இவ்வாறு தகவல் வழங்கியுள்ளார்.

‘நான்; 32 ஆண்டுகள் லெபனானில் பணியாற்றினேன். நானும் எனது கணவரும் தொழில் செய்ததுடன், எமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்ததுடன், அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பணம் செலுத்தினோம்.’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட இந்தப் பெண், அவரது மகளுடன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும், அவரது கணவர் பணிபுரிந்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவல்களின்படி, லெபனானில் 2 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லெபனானில் தமது பிள்ளைகளுடன் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435