
காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கடமைகளுக்காக சமூகமளிக்கும் வங்கி ஊழியர்கள் கடமைக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் உள்ள வங்கிகள் குறைந்தது 2மணிநேரமாவது திறக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.